விருதுநகர் அருகே தனித்தனியாக ரயில்கள் முன்பு விழுந்து காதல் ஜோடி தற்கொலை

0
817

விருதுநகர் அருகேயுள்ள எம்.ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சோலைமீனா (20). இவர் விருதுநகர் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். பகுதி நேரமாக பயிற்சி கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையில் செவிலியராகவும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சாத்தூர் அருகேயுள்ள சிறுகுளம் பகுதியைச் சேர்ந்த, எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்த பிரவீன்குமார் (21) என்ற வாலிபருடன், சோலைமீனா பழகி வந்தார். இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இது குறித்து சோலைமீனாவுடன் பணியாற்றி வந்த சிலர் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த சோலைமீனா, நேற்று பட்டம்புதூர் ரயில் தண்டவாளப்பகுதிக்குச் சென்று, அந்த வழியாக திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

சோலைமீனா ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேள்விப்பட்ட பிரவீன்குமாரும், விருதுநகர் வேலுச்சாமி நகர் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளப்பகுதிக்குச் சென்று அந்த வழியாகச்சென்ற குருவாயூரில் இருந்து சென்னை சென்ற விரைவு ரயில் முன்பு பாய்ந்தார். இதில் சிக்கி படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன்குமார், சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரவீன்குமார் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். சம்பவம் குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசாரும், விருதுநகர் ரயில்வே போலீசாரும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here