எலெக்ட்ரீஷியனுக்கு இ பாஸ் அவசியமா?

0
1142

கொரோனா முழு ஊரடங்கை தளர்த்தி அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது. அதேபோல்,மெக்கானிக்குகள்,எலக்ட்ரீசியன்கள்,கார்பென்டர்கள் போன்ற அன்றாடத் தேவைக்குரிய பணியாளர்களையும் செயல்பட வழி விட்டிருக்கிறது.
ஆனால் , இவர்களுக்கு தங்கள் தொழிலை எளிதகா செய்வதற்கு ஏற்ப தெளிவான உத்தரவு இல்லை.

இன்றைய சூழலில் இவர்கள் இரு சக்கர வாகனத்திலேயே செல்ல முடியும். கார், வேன்களில் செல்லத் தேவையில்லாதபோது எதற்காக இ பாஸ் என்று தெரியவில்லை. அதுமட்டுமல்ல, இவர்களில் பெரும்பாலானோர் அந்தந்த பகுதிகளிலேயே இயங்குபவர்கள்.

இவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகள்.படித்தவர்கள் குறைவு. எனவே, இ பாசுக்கான விண்ணப்ப நடைமுறையை பின்பற்றுவது கடினம். அதற்கேற்ப முதல் நாளிலேயே ஓவர் லோடு காரணமாக இ பாஸ் விண்ணப்ப சர்வர் பழுதாகிவிட்டது.

இவர்கள் அனைவருக்கும் இ பதிவு சாத்தியம் அற்றது. அப்படியே இ பாசை தளர்த்தினாலும், காலையில் பணிபுரிய செல்லும் போதோ மாலையில் வீடு திரும்பும்போதோ காவலர்களின் பிடியில் சிக்க வாய்ப்பு உள்ளது.

அச்சத்திலும் குழப்பத்திலும் உள்ள இவர்கள் நிம்மதியாக வேலை செய்துவிட்டு
வீடு திரும்பும் வகையில், காவலர்களுக்கு வழிகாட்டும் தெளிவான
உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here