I
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பூச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகண்ணன்(22) இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் வெல்டராக பணியாற்றி வந்தார்
இந்த நிலையில் வாலிபர் விஜயகண்ணன் தனது உறவினர் பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது
இதனை தனது பெற்றோர்களிடம் கூறி பெண் கேட்ட சென்றபோது பெண்வீட்டார் திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது
இதனால் மனவேதனையடைந்த வாலிபர் விஜயகண்ணன் இன்று காலை தனது வீட்டருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்

சம்பவம் அறிந்த வாடிப்பட்டி போலீசார் இறந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்














