கோவை மாவட்டத்தில் நேற்று புதிதாக நான்கு பேர், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று நான்கு பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது.
மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்தது.இதில், 33 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 90 பேரில், 52 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.