தீபாவளி சிறப்பு ரயில்களும் முன்பதிவும்

0
754

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வரும் 25ஆம் தேதி 9.40 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும் ரயில் 26ஆம்தேதி காலை தாம்பரம் செல்லும். அதேபோல், 26ஆம்தேதி இரவு 7.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் ரயில் நெல்லைக்கு மறுநாள் வந்து சேரும். 25ஆம்தேதி எர்ணாக்குளத்துக்கும் தாம்பரத்திலிருந்து ரயில் புறப்படுகிறது.

எர்ணாகுளத்தில் இருந்து எம்ஜிஆர் ரயில்நிலையத்துக்கு அக்டோபர் 24 இரவு 7.40க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். எம்ஜிஆர் ரயில்நிலையத்தில் இருந்து எர்ணாகுளத்துக்கு அக்டோபர் 25 மாலை 3.10க்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அக்டோபர் 26ம் தேதி இரவு 7.20க்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்கும்.
தாம்பரத்திலிருந்து கொச்சுவேலிக்கு முன்பதிவில்லாத ரயில் 26ஆம்தேதி காலை 7.45க்கு புறப்படுகிறது. நெரிசலை தவிர்ப்பதற்காக இது நாகர்கோவில் வழியாக இயக்கப்படுகிறது. இது இரவு 11 மணிக்கு கொச்சுவேலியை அடையும்.
இவை தவிர, மெட்ரோ ரயில் தீபாவளிக்கு சிறப்பு கட்டண சலுகை அறிவித்துள்ளது. தீபாவளியன்றும் மறுநாளும் பாதி கட்டணத்தில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here