தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நோய்த் தொற்றினால் போடப்பட்ட முழு பொது முடக்கத்தால் திருநங்கைகள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்த நிலையில், பெரியகுளம் பகுதியில் உள்ள 4 காவல் நிலையங்களிலும் பணி புரியும் பெண் காவலர்கள் ஒன்றிணைந்து, 28 திருநங்கைகளுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகை பொருட்கள், காய்கறி, அரிசி, உள்ளிட்ட பொருட்களை அவர்களது சொந்த செலவில் வழங்கி உதவினர்.
இதற்கான நிகழ்வில் பெரியகுளம் காவல்துறை துணைகண்காணிப்பாளர் முத்துக்குமார் பங்கேற்று திருநங்கைகளுக்கு உதவிகளை வழங்கினார்.