தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று அவரது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தும் நிலையில் சாத்தான்குளம் நகர ஒன்றிய இளைஞரணி சார்பில் அதனை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செயலாளர் சக்தி, நகர செயலாளர் சிவா, துணை செயலாளர் வள்ளி கோமதி விநாயகம் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.








