இந்தி நாளான இன்று தனது சொடுக்கியில் ‘உலகில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழி இருப்பது அவசியம். பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான் நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘ தமிழ்நாட்டில் தமிழுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. இங்கு இரு மொழிதான் நிலைத்திருக்கும். உயிரை கொடுத்தாவது கொள்கையை காப்போம்’ என்று உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.














