ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியதாவது:-
எதிர்க்கட்சித் தலைவர் அரசை தாக்கி பேசியிருந்தாலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது உண்மைதான். தோல்பூர், ஆல்வார் அல்லது பெஹ்ரர் உள்ளிட்ட பல இடங்களில் சட்டம் ஒழுங்கு கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் தான் உள்ளது. இந்த விசயத்தில் அரசு தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறினார்.
துணை முதல்வர் சச்சின் பைலட்டின் கருத்து, உள்துறை அமைச்சக பொறுப்பை வைத்திருக்கும் முதலமைச்சர் கெலாட்டை குற்றஞ்சாட்டும் வகையில் உள்ளதாக காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.













