உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான்: பிரேமலதா

0
624

சென்னை சாலிகிராமம் அபுசாலி சாலையில் கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு மேல் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த இந்த பணியின் காரணமாக அபுசாலி சாலை மிகவும் மோசமடைந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பழுதடைந்த சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகளை மழை காலத்திற்கு முன்பாக துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். சேறும் சகதியுமாக காட்சி அளித்து வந்த அபுசாலி சாலையை சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

அப்போது பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-
. மக்கள் பிரச்சினைக்காக முதலில் குரல் கொடுக்க கூடியவர் கேப்டன். அந்த அடிப்படையில் இந்த சாலையை சரி செய்கிறோம்.அரசுக்கு எதிராகவோ காவல்துறைக்கு எதிரான போராட்டமோ அல்ல. இந்த பகுதி மக்களுக்காக செய்கின்ற இந்த பணி இன்று மாலைக்குள் முடியும். தேவைப்பட்டால் நாளை நடைபெறும்.
ஐ.என்.எஸ். மீடியா வழக்கு தொடர்பாக ப.சிதம்பரத்தை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கேப்டன் விஜயகாந்த் ‘‘உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான். ஊழல் செய்தவன் தண்டனை அனுபவிப்பான்’’ என்று சொல்வார். அந்த கருத்தை நானும் தெரிவிக்கிறேன். என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here