இன்று வைகாசி மாத தேய்பிறை அஷ்டமி, இது பிராமணிய மதத்திலும், ஆகம சமயங்களிலும் சதாசிவாஷ்டமி என வழங்கப்படுகிறது.
இதை பைரவ வழிபாட்டிற்கு ஏற்றதாக கூறுகின்றனர்.
பைரவருக்குண்டான பொது காயத்ரி மந்திரமாக
’சுவாநத் வஜாய வித்மஹே சூலஹஸ்தாய தீமஹி
தந்தோ பைரவ பிரசோதயாத்’ என ஓதப்படுகிறது.
. நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும். வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் ராகு கால நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.
புதன்கிழமை அன்று ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம் என்பது அதைக் கடைப்பிடிக்க மேற்கொள்ளப்படும் நியதி.
புதன்கிழமை மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் இந்த கிழமையில் பைரவரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும். புதன் கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும் என்பது அவர்கள் நம்பிக்கை.