நாங்குநேரி அருகே உள்ள சூரங்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அனந்த பத்மநாபன் (வயது 43). இவர் அங்குள்ள சாஸ்தா கோவில் பூசாரி ஆவார். இவரது மகள் ராஜேஸ்வரி (18) பொன்னாக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தினசரி சூரங்குடிக்கு அருகே உள்ள வீராங்குளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த 19-ந்தேதி காலையில் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற ராஜேஸ்வரி மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிய பெற்றோர்கள் கல்லூரியில் விசாரித்த போது அவர் அன்று கல்லூரிக்கே செல்லவில்லை என்பது தெரிந்தது. அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவரது தந்தை அனந்த பத்மநாபன் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.







