சேத்தூர் கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த மூதாட்டியின் 2 சவரன் நகையை பறித்து சென்ற சம்பவம். கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கில் ஓரளவு குற்றங்கள் குறைந்துள்ளதாக கூறப்பட்டாலும், ஆடுன காலும் திருடுன கையும் சும்மா இருக்காது என்பது போல், திருடர்கள் பல வழிகளில் தங்கள் கைவரிசையை காட்டுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ளது சேத்தூர் கிராமம். இங்கு தனது வீட்டு வாசலில் வேலை செய்து கொண்டு இருந்த மூதாட்டி சண்முகவள்ளியை, இரு சக்கர வாகனத்தத்தில் வந்த மர்ம நபர் கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்து இருந்த 2 சவரன் தங்க நகையை பறித்து சென்றனர்.
சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்ததை அடுத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














