ஊர் சுற்றினால் கொரோனா பரிசோதனை

0
1224

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் ஊரடங்கு உத்தரவினை கடுமையாக கடைபிடித்து வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக, இன்று ஆற்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான அண்ணா சாலை சந்திப்பு பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை செய்து அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்தும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதங்களும் விதித்தனர்.
அத்துடன் அவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here