தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே தாங்கை கைலாசபுரம் பகுதியை சேர்ந்த வைகுண்ட ராஜா (70) என்ற முதியவர் கோழி வியாபாரம் மற்றும் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் கந்தபுரம் பகுதியை சேர்ந்த வேல்குமார் மகன் சதீஷ் (32) என்பவர் கோழி வாங்குவது போல நடித்து அங்கு கோழியை திருடியுள்ளார். இதுகுறித்து மெய்ஞானபுரம் போலீசார் புகாரின் பேரில் வழக்கு பதிந்து கைது செய்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் திருட்டில் ஈடுபட்ட சதீஷை ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.









