நெல்லை மாவட்டம் மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு கண்காணிப்பு ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மானூர் குளத்துக் கரையில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வகையில் நின்று கொண்டிருந்த திருமலாபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (37), மற்றும் மானூர் பகுதியை சேர்ந்த பிரனிஷ்(38) இருவரை விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தில் சாராயம் வைத் விற்பனை செய்தது தெரிய வந்தது.
தொடர்ந்து இருவரிடமும் விசாரணை செய்ததில் கிடைத்த தகவலின்படி மடத்தூர் காட்டுப் பகுதியில் காவல்துறையினர் சென்று பார்த்தபோது மடத்தூர் பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் (35), மானூர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32) மற்றும் ஈசாக்(37), ஆகிய மூவரும் கள்ளச்சாராயம் காய்ச்சி வந்தது தெரியவந்தது.உடனடியாக அவர்கள் மூவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து கள்ளச் சாராய காய்ச்சி, விற்பனையில் ஈடுபட்ட பெரியசாமி, பிரனிஷ், மார்டின், முத்துக்குமார், ஈசாக் ஆகிய ஐந்து நபர்கள் மீது வழக்கு பதியபட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். மேலும் கள்ளச் சாராய விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு கள்ளசாரயம் காய்ச்ச பயன்படுத்திய ஊரல்கள் மற்றும் பெரிய பாட்டல்களில் வைத்திருந்த கள்ளசாரயத்தையும் காட்டுபகுதியில் வைத்தே அழித்தனர்.







