சாத்தான்குளம் பத்திரிக்கையாளர்கள் மன்றம் சார்பில் மன்ற ஆண்டுவிழா, தேசிய பத்திரிக்கையாளர் தினவிழா, மூத்த பத்திரிக்கையாளர்கள் கெளரவிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு சாததான்குளம் பத்திரிக்கையாளர்கள் மன்ற தலைவர் முத்துவேல் தலை\மை வகித்தார். சாத்தான்குளம் பேரூராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய், . வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை, சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்கத் தலைவர் எட்வின் காமராஜ், நகர திமுக செயலர் மகா இளங்கோ, மன்ற துணைத் தலைவர் தினகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்குரைஞர் ஆ.க.. வேணுகோபால் வரவேற்றார்,
விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் தொழிற்சங்க பொதுச் செயலாளர் அய்கோ, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஒன்றிய அதிமுக முன்னாள் செயலர் ஆர்.எஸ்.எஸ். ராஜ்மோகன், ஒன்றியக்குழு துணைத தலைவர் எஸ். அப்பாதுரை, புதுக்குளம் ஊராட்சித் தலைவர் . பாலமேனன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும், வடக்கு ஒன்றிய திமுக செயலருமான ஏ.எஸ். ஜோசப். ஐஎன்டிடியுசி மாநில பொதுச் செயலர் லூர்துமணி, திசையன்விளை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் , வட்டார காங்கிரஸ் தலைவர் பார்த்தசாரதி, சக்திவேல்முருகன் உள்ளிட்ட பலர் பேசினர்.

கூட்டத்தில் சாத்தான்குளம் டிஎஸ்பி சுபக்குமார், சாஸ்தாவிநல்லூர் ஊராட்சித் தலைவர் திருக்கல்யாணி, மாவட்ட அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலர் கார்த்தீஸ்வரன், வர்த்தக சங்க தலைவர் அப்பு கண்ணன் செயலாளர் மதுரம் செல்வராஜ் மற்றும் திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத் , ஸ்ரீவைகுண்டம், பேய்க்குளம் பகுதி செய்தியாளர்கள் பங்கேற்றனர்.

பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மூத்த பத்திரிக்கையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். கூட்டத்தில் வட்ட – பகுதி நேர செய்தியாளர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. .மன்றப் பொருளாளர் சிதம்பர மணிகண்டன் நன்றி கூறினார்.









