போலீஸ் உதவியுடன் போலி டாஸ்மாக் பள்ளிவாசல் அருகே கல்லா கட்டும் கள்ள வியாபாரி

0
1479


நெலை மாவட்டத்தின் தென்கோடியில் இருக்கும் ஆற்றங்கரை பள்ளிவாசல் பிரசித்தி பெற்றது. அழகிய நம்பியாற்றின் அருகே இருக்கும் இந்த பள்ளிவாசலுக்கு இந்தியா முழுவதுமிருந்து தொழுகைக்கு வந்துசெல்வர்.
இந்த பள்ளிவாசலுக்கு சுமார் 2 பர்லாங்கு தூரத்தில் புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. திறந்திருப்பது அரசாங்கம் அல்ல, போலீசார் உதவியுடன் ஒரு கள்ள சரக்கு வியாபாரி.
ஊரடங்கின் நடுவே டாஸ்மாக் திறந்தும் கொரோனா தடுப்பு உள்ள பல இடங்களில் மதுபானம் கிடைக்கவில்லை. அந்த குறையை ஆங்காங்கே கள்ள சரக்கு வியாபாரிகள் தீர்த்துவைக்கின்றனர். அதில் ஒருவர் தான் ஆற்றங்கரை பள்ளிவாசல் அருகே பக்காவாக ஒரு கடையே கட்டி சரக்கு விற்று கல்லா கட்டுகிறார். ஏற்கனவே சங்கணாபுரத்தில் கள்ள சரக்கு விற்று காசு பார்த்தவர் இவர்.
இதற்காக கூடங்குளம் போலீசுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் மாமூல் கட்டுவதாக அவர் பெருமை பீற்றிக்கொள்கிறார். குடிமக்களுக்கு சுகமாக இருந்தாலும், வழிபாட்டு தலத்துக்கு குடும்பத்தோடு வருபவர்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here