மதுரை மாவட்டம், மேலூர் முனிக்கோவில் அருகே நான்கு வழிச்சாலையில் பாலம் வேலை கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இதில், போதிய பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை பதாகைகள் எதுவும் வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில், சென்னையிலிருந்து ராஜபாளையத்தில் தனது நண்பரின் இல்ல விழாவிற்கு ஹானஸ்ட்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் சென்ற பொழுது,
கார் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், ஹானஸ்ட்ரஜின் மனைவி, பவானி மற்றும் கார் ஓட்டுநர் பாலாஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் . மேலும், இதில் பயணம் செய்த பவானியின் 10 மாத குழந்தை ரையன்மகில் மற்றும் ஹானஸ்ட் ராஜ் அவரின் அம்மா உள்ளிட்ட மூன்று பேரும் காயங்களுடன் உயிர்த்தபினர்.
இவர்களை மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக, மேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.