வடமாநில தொழிலாளி கொலை- 2 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது

0
685

குலசேகரன்பட்டினத்தில் வடமாநில தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த வாலிபர்கள் இருவர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
குலசேகரபட்டினம் அனல்மின்நிலையத்தில் தனியார் ஒப்பந்த தொழிலாளியாக வேலைபார்த்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் பிரசாத் யாதவ் என்பவர் கடந்த அக்டோபர் 5ஆம்தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக நாசரேத் வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்த அம்மாமுத்து மகன் மூர்த்திராஜா (27) குலசேகரன்பட்டினம் காமராஜர் நகரைச் சேர்ந்த செல்லத்துரை மகன் முத்துச்செல்வன் (27) ஆகிய இருவரையும் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின் பேரில் கலெக்டர் இளம்பகவத் உத்திரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், ஆறுமுகநேரி போலீஸ் ஸ்டேஷனில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட தலைவன்வடலியைச் சேர்ந்த வேல்சாமி மகன் சூர்யா (23) என்ற இளைஞரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10மாதங்களில் மட்டும் 115 பேர்கள் குன்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here