கொரானா தடுப்பு பணியில் இருந்த சுகாதார இன்ஸ்பெக்டருக்கு காவல் இன்ஸ்பெக்டர் அபராதம் விதித்தது மதுரையில் விவாதத்தை கிளப்பியுள்ளது
மதுரை வலையங்குளம் பகுதியிலுள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக மணிகண்டன் என்பவர் பணிபுரிந்து வருகிறார் இவர் நேற்று அச்சம்பத்து பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் பணிகளை முடித்துவிட்டு மேல வேலூரில் உள்ள அவரது இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி சென்றுகொண்டிருந்தபோது சிந்தாமணி சாலையில் ரயில் தண்டவாளத்திற்கு அருகே காவல்துறையினர் வழிமறித்து சோதனை செய்தபொழுது தனது அடையாள அட்டை காண்பித்து நான் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறேன் என்று கூறியவுடன் பெயர் மற்றும் வாகனம் எண்ணை காவல்துறையினர் குறித்து விட்டு அவரை அனுப்பி வைத்தனர்

பின்பு அவருடைய தொலைபேசி எண்ணிற்கு காவல்துறை சார்பில் 500 ரூபாய் அவதாரம் செலுத்த வேண்டும் என்றுகுறுஞ்செய்தி வந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணியில் இந்த தனக்கு கீரைத்துறை காவல்துறையினர் தேவையற்ற முறையில் அபராதம் விதித்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.














