ஓட்டப்பிடாரத்தை அடுத்துள்ள குலசேரநல்லூரை சேர்ந்த முருகன் மகன் லட்சுமணன்(41). இவரது மனைவி மகேஸ்வரி(36). அங்குள்ள அங்கன்வாடியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த லட்சுமணன் மனைவி மகேஸ்வரியை கொலை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்துக்கு வந்து சரணடைந்தார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் சிவலிங்கசேகர் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை கைது செய்தார்.