தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும். சம்பளத்தை உயர்த்த வழங்க வேண்டும். புதிய பணியாட்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பேருந்து கழக ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அனைவரும் சனிக்கிழமை மாலைக்குள் பணிக்கு திரும்புமாறு அரசு தரப்பில் இறுதி கெடு விதிக்கப்பட்டது. ஆனாலும் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பவில்லை.
இதனையடுத்து முதல்வர் சந்திரசேகர் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 48, 000 பேரை மொத்தமாக டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். மேலும், நிலைமையை சமாளிக்க அரசு பேருந்துகளை குத்தகைக்கு விட முடிவெடுத்ததோடு, 4 ஆயிரம் தனியார் பேருந்துகளுக்கு கூடுதல் அனுமதியும் வழங்கியுள்ளார்.













