மதுரை கலெக்டர் அலுவலக 5ஆவது மாடியில் ஏறி மாற்று திறனாளி தற்கொலை மிரட்டல்

0
394

மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் கொரானா தொற்று காரணமாக கடந்த ஏழு மாதங்களாக பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்படவில்லை. இந்த நிலையில், இன்று நேரடியாக மனுக்களை பெற ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், மதுரை மாவட்டம் பேரையூர் தாலுக்கா, சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த ராம்குமார் வயது 24 மாற்றுத்திறனாளியான மதுரை மாவட்ட ஆட்சியாளர் கூடுதல் கட்டடத்தில் உள்ள ஐந்தாவது மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவாக, கூச்சலிட்டு உள்ளார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசாரும் அவர் பேசி தீர்த்துக்
கொள்ளலாம் என்று கீழே இறங்கச் சொல்லி கூச்சலிட்டனர். இறங்க மறுத்துவிட்டார்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தல்லாகுளம் மற்றும் மீட்பு குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியாளர் கூடுதல் கட்டிடத்தில் உள்ள ஐந்தாவது மாடிக்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும், அவர் இறங்க மறுக்கவே சாதுர்யமாக செயல்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் அவரைக் கீழே குதிக்க விடாமல் லாவகமாக பிடித்தனர்.

முதற்கட்ட விசாரணையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைக்காக புகார் கொடுத்தும், காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here