ஆந்திரா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அப்பகுதியை சேர்ந்த வம்சி (35) என்பவர் கொரோனா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருகு 16 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியில் அவர் இறந்துவிட்டார்.
அதுவரை 4 லட்ச ரூபாய் சிகிச்சை கட்டணம் அளிக்கப்பட்ட நிலையில் மேலும் 20 லட்ச ரூபாய் கேட்டதால் உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். வம்சியின் சகோதரியான மருத்துவர், சிகிச்சை குளறுபடியால் தான் தன் சகோதரர் இறந்தார் என குற்றஞ்சாட்டினர்.
தேவையற்ற 6 ஸ்டிராய்டு ஊசிகள் போட்டதாலேயே அவர் இறந்தார் என வேதனையுடன் கூறினார். உறவினர்கள் கூடி மருத்துவமனையின் சன்னல், கதவு, கண்ணாடிகளை உடைத்தனர்.
இறுதியில், போலீசார் தடுத்து நிறுத்தி இரு சாராரையும் விசாரித்தனர். மருத்துவமனையினர் சிகிச்சைக்கு பணம் வேண்டாம் எனக் கூறியதையடுத்து வம்சியின் உடலை உறவினர்கள் பெற்றனர்.












