ஊரடங்கு காலத்தில் பொதுமக்களை பொத்திக்கொண்டு வீட்டில் உட்காரச் சொல்வது நியாயமே. அவர்களின் அடிப்படிடை தேவைக்கு குறைந்தபட்சம் கொடுக்கவேண்டும் என்பது கூடுதல் கோரிக்கை. ஆனால், அரசியல் தலைவர்கள் ஆய்வு என்ற பெயரில் தேவையில்லாமல் ஊசி போடும் இடத்திலும், அதிகாரிகள் நிவாரணம் வழங்கும் இடத்திலும் ஆய்வு என்ற பெயரில் பெருங்கூட்டமாக வந்து நின்று விஷயமில்லாமல் கெக்கே பிக்கே கேள்விகளை கேட்டும், போஸ் கொடுத்தும் ஃபோகஸ் கொடுத்தும் வெட்டி ஆபிசர் வேலை பார்ப்பது சரியா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதனால் முக்கிய நோய் தடுப்பு, சிகிச்சை நிவாரண முகாம்களில் தலைவருக்கு தலா ஒரு மணி நேரம் என்ற கணக்கில், குறைந்த பட்சம் 3 பேர் விசிட் அடிப்பதால் 3 மணி நேரம் விரயமாகிறது.
அதிகாரிகள் மட்டத்தில் பணிகளை செய்யவிட்டு, அதில் குறைகள், புகார்கள் வரும்போது மட்டும் க்கூட்டமேயின்றி, ஒரேயொரு உதவியாளருடன் அமைச்சர் அல்லது எம்.எல்.ஏ போகலாம். தெருவுக்க்கு தெரு நிவாரண பொருள் வழங்கும் கூட்டம் நடத்தி, வேறிடத்தில் வேலை பார்க்கவேண்டிய அதிகாரிகள் அங்கு வீணாக வரவழைத்து தங்கள் விளம்பரத்துக்காக அவர்கள் பணி நேரத்தை பலியாக்கலாமா?

கூட்டங்கள், விழாக்களில் பேனர்களை தவிர்க்கச்சொன்னார் முதல்வர். இப்போது வரவேற்பு வேண்டாம், என்னுடன் வரவும் வேண்டாம் என்றும் தொண்டர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார். இந்நிலையில், தேவையில்லாத கொசுக்கள் கூட்டத்தையும் தடை செய்தால் கொரோனா ஒழிப்பு வேலை விறுவிறுப்பாக நடக்குமே? இருப்பு அடிக்கும் இடத்தில் ஈக்களுக்கு என்ன வேலை?













