சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘ காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்னும் 24 மணி நேரத்தில் நெல்லை, குமரி, கோவை, நீலகிரியில் கனமழைபெய்யும். சென்னையில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருக்கும். இரவு லேசாக மழை தூறலாம். மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மன்னார் வளைகுடா உள்ளிட்ட தென் தமிழக கடலில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என்பதால் கடலுக்கு போவதை தவிர்க்கவேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.