மதுரை ரயில்வே கோட்டத்தில் புத்தகத்துடன் ஒரு பயணம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புத்தக வாசிக்கும் அனுபவத்தை அளிக்க பிரபல வார, மாத இதழ்கள் வழங்கப்படும்.
இந்த திட்டம் இன்று மதுரையில் இருந்து புறப்பட்ட மதுரை – பிகானீர் வாராந்திர விரைவு ரயிலில் தொடங்கி வைக்கப்பட்டது. இ
பரிசோதனை அடிப்படையில் குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டியில் உள்ள எட்டு அறைகளில் உள்ள பயணிகளுக்கு 3 தமிழ், 2 ஆங்கிலம், 5 பிற மொழி இதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த புதிய திட்டத்தை மதுரை முது நிலைக் கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன் தொடங்கி வைத்தார். விழாவில் கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மகேஷ் கட்கரி அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து மற்ற வகுப்புகளுக்கும் மற்ற ரயில்களுக்கும் புத்தக வாசிப்பு அனுபவம் விரிவுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.