தூத்துக்குடி சிஎஸ்ஐ சேகர குருக்களுக்கு ஊதிய உயர்வு

0
2973

தூத்துக்குடி சிஎஸ்ஐ சேகர குருக்கள், அண்டை மண்டலத்தில் வழங்குவது போல் தங்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு கோரி வந்தனர். அதற்காக கடந்த மாதத்திற்கான ஊதியத்தை பெறாமல் புறக்கணித்து வந்தனர்.

தற்போது தூத்துக்குடி பிஷப் தற்காலிக பதவி நீக்கத்தில் உள்ள நிலையில், கோயம்புத்தூர் பிஷப் கூடுதலாக தூத்துக்குடி திருமண்டலத்தை நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில், சுமார் 57 லட்ச ரூபாய் மட்டுமே மாதாந்தர வருவாய் கொண்ட திருமண்டலத்தில், ஊதியத்தை உயர்த்தி வழங்குவதன் மூலம் சுமார் 12 லட்சம் வரை நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என்பதாலும், நிரந்தர பிஷப் இல்லாத நிலையில், ஊதிய உயர்வுக்கு பிரதம பேராயரின் ஆணையர் அனுமதி வழங்க வேண்டும் என்பதாலும் ஊதிய உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.


இச்சூழலில், பாஸ்ட்ரேட் வாரியாக நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டும் வகையில் நிதியை ஈட்டி, றிஏ, டிஏ உயர்த்தி ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு, சேகர குருக்களின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு விட்டது என்று டயோசிசன் நிர்வாக வட்டத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here