நாதசுவர இசைக் கலைஞர் மன்னார்குடி பரமசிவம் பிள்ளை பிறந்த நாள்

0
1991

மன்னார்குடி பரமசிவம் பிள்ளை 1929 ம்ஆண்டு ஆகஸ்ட் 21 ம் தேதி பிறந்த தமிழகத்தைச் சேர்ந்த நாதசுவர இசைக் கலைஞராவார்.

இப்போதைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர் பரமசிவம் பிள்ளை, பெற்றோர்: சண்முகம் பிள்ளை – நாகரத்தினம் அம்மாள்.

தனது ஏழாவது வயதில் திருப்பழனம் பொன்னையா என்பவரிடம் மாணவராகச் சேர்ந்த பரமசிவம், அவரிடம் 5 ஆண்டுகள் நாதசுவரம் கற்றுக் கொண்டார். அதன்பிறகு சுவாமிமலை கந்த சுவாமி பிள்ளையிடம் 3 ஆண்டுகள் நாதசுவரம் கற்றுக் கொண்டார்.

1970ஆம் ஆண்டு தில்லியில் வாசித்த போது, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டுதலைப் பெற்றார்.முதலாம் உலகத் தமிழ் மாநாடு நடந்த போது, தொடக்க விழாவில் பரமசிவம் பிள்ளையின் நாதசுவர நிகழ்ச்சி நடந்தது.

புகழ்பெற்ற தவில் கலைஞர்களான நாச்சியார்கோயில் என். பி. இராகவப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம் பிள்ளை, நீடாமங்கலம் என். டி. எம். சண்முக வடிவேல், யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல், திருவாளப்புத்தூர் டி. ஏ. கலியமூர்த்தி, தஞ்சாவூர் கோவிந்தராஜன் ஆகியோர் இவருக்கு தவில் வாசித்துள்ளனர்.

நாகஸ்வர வித்வன்மணி நாகஸ்வர கேஸரி போன்ற விருதுகளை பெற்ற பரமசிவம் பிள்ளை, 23 ஆகஸ்ட் 1976 அன்று தனது 47ஆவது வயதில் மாரடைப்பின் காரணமாக காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here