தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரை புளியங்குளத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் உரிமம் எடுத்து நடத்தி வருகிறார். இன்,று நண்பகல் பனிரெண்டு மணிக்கு மேலும் டாஸ்மார்க் கடை திறக்கப்படவில்லை இதுகுறித்து டாஸ்மார்க் விற்பனையாளரிடம் முருகேசன் கேட்டபோது, எங்களுக்கு பார் திறந்திருந்தால் டாஸ்மார்க் கடையை மூடச் சொல்லி உத்தரவு வந்துள்ளது என்று விற்பனையாளர் கூறியுள்ளனர்.
இதற்கிடையே டாஸ்மாக் கடை முன்பு மதுபான பிரியர்கள் ஏராளமாக குவிந்ததனால் பார் உரிமையாளர் மதுபான பிரியர்கள் ஆகியோருக்கும் டாஸ்மார்க் கடை விற்பனையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த வாக்குவதற்கு பின்னர் டாஸ்மார்க் கடை திறக்கப்பட்டது.
இதுகுறித்து பார் உரிமையாளிடம் கேட்டபோது, மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தங்களிடம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மாத மாதம் கட்டச் சொல்லி வலியுறுத்தியதாகவும் தங்களால் முடியாது என கூறியதால் டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி உத்தரவிட்டதாகவும் தெரிவித்தனர்.
கூடுதல் விசாரணையில் ல், அமைச்சர் ஒருவர் தமிழகம் முழுவதும் உள்ள பார்களை தன் பினாமி பேரில் எடுத்து கூடுதல் விலைக்கு பிறருக்கு கொடுத்ததாகவும், தற்போது பார் உரிமையாளர்களிடம் கட்டாய வசூல் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.









