ஹைதராபாத்தை சேர்ந்த பிவி சிந்து கடந்த இரண்டு முறையாகவே உலக பேட்மிண்டன் போட்டிகளில் சோபித்து வருகிறார். இதுவரை வெண்கலம், வெள்ளி பதக்கங்களை பெற்றுவந்தவர், இம்முறை தங்கப்பதக்கத்தை தாங்கிவந்துள்ளார். இது அவருக்கு 5ஆவது பதக்கமாகும்.
இறுதிப்போட்டியில் ஜப்பானின் வீராங்கனை ஒகுஹாராவை 24: 7, 24: 7 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றியை நிலைநாட்டியுள்ளார் நமது வீராங்கனை. பிரதமர் முதல் பெட்டிக்கடைக்காரர் வரை சிந்து புகழ் பாடிக்கொண்டிருக்கின்றனர்.













