ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியில் சேகர் என்பவருக்கும் அவரது தங்கை செண்பகவல்லிக்கும் சொத்து பிரச்சினை இருந்து வருகிறது இதில் கட்டப்பஞ்சாயத்து செய்து ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சுந்தரவள்ளியின் கணவர் பாலமுருகன், சாதிப் பெயரைச் சொல்லி ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து அட்டகாசத்தில் ஈடுபட்டார்.
சம்பவத்தன்று இரவு செண்பகவல்லி வீட்டுக்கு சென்றவர், வீட்டு கதவை காலால் உதைத்து தள்ளி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், பாலமுருகன் விசாரிக்க வந்த போலீசார் முன்னாலேயே செண்பகவல்லிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மின்னஞ்சலில் போலீசுக்கு புகார் தெரிவித்துள்ளார். ஆனாலும் பாலமுருகன் ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவரது உறவினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் .








