தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள 9 ஊராட்சி செயலாளர் பதவிக்கான பணியிடங்களை நிரப்பும் வகையில் 9.11.2019 முதல் 22.11.2019 வரை விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன.
அவை ஆய்வு செய்யப்பட்டு, ஓராண்டுக்குப் பின் 6.10.2020 அன்றுநேர்முகத் தேர்வு நடை பெறுவதாக சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்களால் அழைப்பு அனுப்பப்பட்டது.
இந்நிலையில்,நிர்வாக காரணங்களால் நேர்முகத்தேர்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகவும், அது நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.









