கொரோனா நோய் தொற்று தடுப்பதற்கான மருத்துவம் , மருத்துவம் அல்லாத அத்தியாவசிய சேவைக்காக தகுதி வாய்ந்த நபர்களான அலோபதி மருத்துவர்கள் , ஆயுஷ் மருத்துவர் கள் , பிஎஸ்சி , நர்சிங் , பொது நர்சிங் , இந்தியா வில் பதிவு செய்ய காத்திருக்கும் வெளிநாட்டு மருத்துவ பட்டம் பெற்ற மருத்துவர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் , பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் , ஆய் வக தொழில்நுட்ப வல்லுநர்கள் பதிவுசெய்யலாம் என மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் அழைப்பு விடுத்திருந்தார். .
இப்பணியிடங்களுக்கு மே 30க்குள் பதிவு செய்ய வேண்டும் . உசிலம்பட்டி , திருமங்கலம் , மேலூர் , திருப்பரங்குன்றம் , வாடிப்பட்டி , பேரையூர் அரசு மருத்துவமனை களில் கொரோனா சிசி கிச்சை பிரிவில் பணிபுரிய விருப்பமுள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் , கணினி உதவியாளர்கள் , பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் தங்களது விண்ணப்பம் , கல்வி சான்றிதழ்கள் ( அசல் மற்றும் நகல் ) இதர சான்றிதழ்கள் முன் அனுபவ சான்றிதழ் களுடன் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் 3 ஆவது தளத்தில் உள்ள , நலப்பணிகள் இணை இயக்குநர் தற்காலிக அலுவலகத்தில் நேரடியாக வந்து சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
எனவே, மதுரை விசுவநாதபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் பெருங்கூட்டம் குவிந்தது. மேலும் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முக தேர்வும் நேற்று தொடங்கி இன்றும் நடக்கிறது .அதனாலும் விண்ணப்பம் வழங்குவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.












