முறைகேடாக வென்றதாக கூறிய கோவில்பட்டி தலைவரை முறையாக சேர்த்துக்கொண்ட திமுக

0
1397

கோவில்பட்டி ஒன்றிய சேர்மன் கஸ்தூரி திமுகவில் இணைந்ள்ளார். இது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒன்றியத்தில் தலைவர் தேர்தல் நடந்த சமயத்தில் திமுக உறுப்பினர்களே பெருவாரியாக இருந்தனர். திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 8.அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் எண்ணிக்கை 1. சாதி, நிதி உள்ளிட்ட பல காரணங்களால் திமுக வேட்பாளர் பூமாரி தோல்வியைத் தழுவினார். கஸ்தூரி வெற்றி பெற்றார். அப்போது திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. தேர்தல் செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்றும், நீதி மன்றம் செல்வோம் என்றும் கனிமொழி, கீதா ஜீவன் போன்றோர் கூறினர்.

ஆனாலும் இரு கட்சி மாவட்டச் செயலாளர்களின் கூட்டுச் சதி காரணமாகவே கஸ்தூரி வெற்றி பெற்றதாக அப்போது பேசப்பட்டது.

இப்போது முறைகேடாக நடந்த தேர்தலில் வென்றதாக கருதப்பட்ட ஒன்றிய தலைவரை திமுக ஆரத் தழுவிக் கொண்டது. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பார்கள். அரசியலில் நன்றி கொன்ற பாவமும் வென்றால் போய்விடும் போலும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here