விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (46). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். இவரது ஆடுகளை அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த சண்முகபாண்டியன் (26), ராசுக்குட்டி (25) இருவரும் சேர்ந்து தங்களது இருசக்கர வாகனத்தின் மூலம் ஆட்டு கொட்டகையில் இருந்த ஒரு ஆட்டை திருட முயன்றுள்ளனர்.
அப்போது அந்தப்பகுதியில் இருந்தவர்கள், ஆடு திருடியவர்களை கையும், களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவரையும், போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













