காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, காரைக்கால், உள்ளிட்ட மாவட்டங்களின் பாசன வசதிக்காக, கல்லணை இன்று(ஆக.,17) காலை 11 மணியளவில் திறக்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் தஞ்சை மாவட்டம் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. பாசன வசதிக்காக திறக்கப்படக்கூடிய தண்ணீர், 12 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த விழாவில் 6 அமைச்சர்கள், 8 கலெக்டர்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர்.