கணபதி அடுத்த காந்திமா நகர் பகுதி 3 வது விதியில் குமார் (எ)லவேந்திரன் ( 49). அவர் மனைவி கவிதா (32) மகன்கள் பூபதி மற்றும் யோசுவா ஆகியோருடன் குடும்பத்துடன் கடந்த ஆறு மாதங்களாக வசித்து வருகிறார். கவிதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி பூபதி என்ற மகன் உள்ள நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இலங்கை அகதியான குமார்(என்கிற ) லவேந்திரனை திருமணம் செய்து தனது முதல் மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கவிதா செல்போனில் அடிக்கடி நண்பர்களுடன் பேசி வந்த காரணத்தினால் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு இருந்துள்ளது. இதனால் கவிதா கோபித்துக்கொண்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டைவிட்டு நண்பர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டிற்கு வந்த கவிதாவுக்கும் லவேந்திரனுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கோபத்தில் இருந்த குமார்(எ) லவேந்திரன் கவிதாவை கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கியதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதனையடுத்து குமார்(எ) லவேந்திரன் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார். அருகில் உள்ளவர்கள் சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடதிற்க்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கவிதாவின் சித்தப்பா மகன் சௌந்தரராஜன் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் மனைவியை அடித்துக் கொன்ற லவேந்திரனைபோலீசார் தேடி வந்தனர். தப்பிச்சென்ற லவேந்திரன் என்ற குமாரை தேடி தனிப்படை போலீஸ் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பூலுவபட்டி இலங்கை அகதி முகாமில் சென்று விசாரணை நடத்தினர் .அப்போது லவேந்திரன் அங்கு வரவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், அங்குள்ள சிலரிடம் தொடர்ந்து விசாரித்தபோது லவேந்திரனுக்கு பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கை அகதி முகாமில் நண்பர்கள் இருப்பது தெரியவந்தது .இதையடுத்து தனிப்படை போலீசார் பவானிசாகர் இலங்கை அகதி முகாமிற்கு சென்றனர் அப்போது அங்கு பதுங்கியிருந்த லவேந்திரணை நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து கோவை சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














