மதுரை ஒத்தக்கடை யானை மலை அடிவாரத்தில் மலையாண்டிபுரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அரியலூரை சேர்ந்த மணிவாசகம் (61)என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் அவரது வயிற்றை கத்தியால் கிழித்து படுகொலை செய்துள்ளனர். கம்பியால் நெஞ்சில் குத்தியும், தலையணையால் அமுக்கியும் கொடோரமாக உயிரை பறித்துள்ளனர்.
இது குறித்து மதுரை ஒத்தக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை மாவட்ட எஸ்பி சுஜித்குமார் இடத்தை பார்வையிட்டார். விசாரனை செய்து வருகிறார்.