விழுப்புரம் அருகே உள்ளது பொய்யபாக்கம் கிராமம். இங்கு சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில் பாசனத்திற்காக பொதுப்பணித்துறை ஏரி ஒன்று அமைந்துள்ளது கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக ஏரியில் ஓரளவு தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்று வந்தது
இந்த நிலையில் பொதுப்பணித்துறை சார்பில் ஏரியில் மீன் வளர்க்கவும் விற்பனை செய்யவும் குத்தகை விடப்பட்டது இந்த நிலையில் மீன் பிடிப்பதற்கு தண்ணீர் அதிக அளவு இருப்பதால் தண்ணீரை ஒரு பகுதியில் ஏரிக்கரையில் உடைப்பு ஏற்படுத்தி சில சமூக விரோதிகள் தண்ணீரை வீணாக வெளியேறி வருகின்றனர.

உடனடியாக வெளியேறும் நீரை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.இல்லையென்றால் தற்போது பயிரிட்டிருக்கும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் போகும் என்று கவலை தெரிவிக்கின்றனர்.














