சுற்றுச் சூழல் பாதுகாப்பாக இருக்க பிளாஸ்டிகை பயன்படுத்த வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி நடக்கவுள்ள ’ஐஃபா அவார்ட்ஸ்’ நிகழ்ச்சி தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் சல்மான் கான், கத்ரீனா கைஃப், மாதுரி தீஷித் ஆகிய பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சல்மான் கானிடம் சுற்றுச் சூழலை காப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு சல்மான், “ முதலில் மரங்களை காக்க வேண்டும். பிறகு தண்ணீர். பிளாஸ்டிக்கை முற்றிலுமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்கை பயனடுத்தாதீர்கள். பிளாஸ்டிக்காக இருக்காதீர்கள்” என்றார்.
கத்ரீனா கைஃப் இதற்கு பதிலளிக்கும்போது, பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாம் ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். மக்கள் சுற்றுச் சுழலை காப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை மறந்துவிட்டார்கள்.” என்று தெரிவித்தார்.
கடந்த சுதந்திர தினத்தின்போது பொதுமக்களை பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்க்குமாறு, தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் பிளாஸ்ட்டிக்கை மறுசுழற்சி செய்ய புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.