மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பழங்காநத்தம் அருகேயுள்ள ஆர்சி தெரு பகுதி 60அடி சாலையில் 5க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு பள்ளி செயல்பட்டுவரும் நிலையில் அந்த சாலையில் அதிகளவிற்கு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதால் சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு , அந்த பகுதியில் நடந்துசெல்லக்கூடிய மாணவர்களும் விபத்துக்குள்ளாகுவதாக எழுந்த புகாரினையடுத்து இன்று மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவில் மற்றும் தேவாலயம் , மற்றும் குடியிருப்பு கட்டிடங்களை ஆகியவற்றை இடித்து அகற்றினர்.

ஆக்கிரமிப்பில் இருந்த கோவிலை இடிப்பதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் உரிய விளக்கமளித்ததோடு ஆக்கிரமிப்பு செய்ததற்கான ஆதாரங்களை வழங்கியதை அடுத்து கலைந்து சென்றனர்.
ஆக்கிரமிப்பில் இருந்த வழிபாட்டுத்தலங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் இடித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.













