கேரள காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான கே.எஸ்.பி.ஏ தங்கல் பாலக்காடு மாவட்ட பட்டாம்பி முனிசிபல் சேர்மனாகவும் முன்பு பதவி வகித்துள்ளார். இந்நிலையில் கே.எஸ்.பி.ஏ தங்கல் பெங்களூரு வழியாக அமிர்தரஸ் செல்ல கோவை விமானம் நிலையம் இன்று காலை வந்துள்ளார்.
வழக்கமான உடமைகளை பரிசோதித்தபோது ஏழு ரவுண்டு புல்லட்டுகளுடன் ஒரு துப்பாக்கி
அவரது சூட் கேசில் இருந்தது.
இதுகுறித்து அவரிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலிசார் விசாரணை நடத்தினர்.
மேலும், துப்பாக்கி மற்றும் புல்லட்டுகளை எடுத்துச் செல்ல அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














