நேற்று முன்தினம் பாவூர்சத்திரம் காவல் நிலையம் அருகே போனில் பேசிக்கொண்டு இருந்த வசந்த் தொலைக்காட்சி செய்தியாளர் பாரதிராஜனை உதவி ஆய்வாளர் சின்னதுரை தாக்கியுள்ளார். அவரது கைபேசி, அடையாள அட்டையை பறித்ததோடு பூட்ஸ் காலால் மிதித்தும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதில் காயமடைந்த பாரதிராஜன் தென்காசி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார்.
இதையடுத்து பல்வேறு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்தி குமாரிடம் உதவி ஆய்வாளர் சின்னதுரை மீது நடவடிக்கை கோரி புகார் அளித்தனர். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் உறுதி அளித்தார்.