வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்

0
1263

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘வாடகை வீட்டில் வசிப்பவர்கள் முன்பணம் செலுத்தி மீட்டர்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த மீட்டரைப் பெறுவதற்கு வாடகை வீட்டில் இருப்பதற்கான ஒப்பந்தத்தின் நகலை ஒப்படைத்தால் போதுமானது. டெல்லியில் வசிக்கும் மக்கள் மாதத்திற்கு 200 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால் அதற்கு கட்டணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை என்று கடந்த ஆகஸ்டு 1ம் தேதி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த பலனை, வாடகை வீட்டில் வசிப்பவர்களும் பெறலாம்’ என்று திட்டத்தை விரிவுபடுத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மாதம் 200 யூனிட்கள் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் குடும்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத்தேவையில்லை. 200 யூனிட்டுகளுக்கு மேல் 1 யூனிட் அதிகம் பயன்படுத்தினாலும் மொத்த கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here