ஆம்புலன்ஸ், இறுதி சடங்குக்கு அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை காஞ்சி கலெக்டர் எச்சரிக்கை

0
1269

ஊரடங்கு காலகட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், தோட்டக்கலைத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை 225 நடமாடும் வாகனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரங்கம் அருகே நடமாடும் காய்கறி வாகனங்களை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது காஞ்சிபுரம் எம்.பி.ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதன் பின்பு அவர் நிருபர்களிடம் கூறுகையில்

‘காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் வசூலித்தால் தனியார் ஆம்புலன்ஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 
 
மருத்துவமனையில் இறந்த உடல்களை பெறுவதற்கு கையூட்டு பெற்றதாக பொதுமக்களிடம் வந்த புகாரின் அடிப்படையிலும், துப்புரவு ஆய்வாளர்கள் அறிக்கையின் அடிப்படையிலும் காஞ்சிபுரம் நகராட்சியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இறந்தவர்களின் உடல்களை இறுதிச்சடங்கு செய்வதற்கு அதிக கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here