நாளை முழு ஊரடங்கு என்பதால் மதுரை வாரச்சந்தையில் இரவில் குவிந்த மக்கள்

0
1043

தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு புதிய கொரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு என்பதால் இரவு ஊரடங்கு உத்தரவையும் மீறி
அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகளை வாங்குவதற்கு பொதுமக்கள் கடைகளை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

தற்போது மதுரை ஆரப்பாளையம் பைபாஸ் சாலை பகுதியில் வழக்கமாக செயல்படும் வாரச்சந்தையில் காய்கறி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.
தனிமனித இடைவெளியின்றி முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகளை வாங்க கூடியுள்ளதால் நோய்த்தொற்று பரவும் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது.


கடந்த வாரம் வரை ஒருநாள் பாதிப்பு 50க்கும் குறைவாக இருந்து வந்த நிலையில், இரண்டு நாட்களாக கொரானா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரானாவை கட்டுப்படுத்த மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்ட 12 குழுக்களில் எதுவும் வாரச்சந்தையில் பொதுமக்கள் கூட்டத்தை முறையாக கண்காணிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கொரானா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொரானா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், பொதுமக்கள் அச்சமின்றி வாரச்சந்தையில் கூட்டமாக கூடியது நோய்த்தொற்று வேகமாக பரவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here