மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா வழங்கி உதவிய புகாரில் சிறைத்துறை காவலர்கள் விஷ்ணுகுமார், செந்தில்குமார் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறைவாசிகளுக்கு கடந்த சில மாதங்களாகவே, செல்போனை வழங்கி 100 முறைக்கு மேல் பேச வைத்ததும், கஞ்சா, குட்கா போன்றவற்றை வழங்கியதும் தெரியவந்துள்ளது.
மதுரை சிறைச்சாலை ப சிறைச்சாலையில், மதுரை போலீசார் அடிக்கடி சென்று சோதனை இடுவதும், சோதனையின்போது, செல்போன், கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தும் செய்வதும் தொடர்கதையாக உள்ளது .
மேலும், சிறைச்சாலை பொருத்தமட்டில், கைதிகளுக்கு வெளியே இருந்து கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் சப்ளை செய்வது செவிவழிச் செய்தியாக உள்ளது . அது இப்போது உறுதியாகியுள்ளது.
சிறையில் கைதிகளுக்கு, கஞ்சா செல்போன் வழங்கும் சிறைக் காவலர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான், சிறைக்குள்ளே கஞ்சா கொண்டு செல்வது தடைபடும் .தமிழக அரசு சட்டங்கள் நடைமுறை படுத்தினாலும், சட்டங்களில் தப்பித்துக்கொள்ள சிறை காவலர்கள் அதை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஆகவே, சிறைச்சாலைக்குள் கஞ்சா போன்ற போதைப் பொருள் கொண்டு செல்லும் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டு வர வேண்டும். என்பதே சமூக ஆர்வலர் கோரிக்கையாகும்.