கரோனா இரண்டாம் சுற்றும் வரும்: மருத்துவ வல்லுநர்கள் ‘பகீர்’

0
1241


தமிழ்நாட்டின் கரோனா தடுப்பு குறித்து தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்தாலோசனை நடத்தினார். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரித்து வரும் நோய் தொற்றை குறைப்பது பற்றி ஆலோசனை கேட்டார்.
இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருடன் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனை நடத்திய பிறகு மருத்துவ குழுவினர் கூறியதாவது:
எந்த நோயும் உச்சம் தொட்டு பின் குறையும். சென்னையில் 12,500 பேர் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் அதிக பரிசோதனையில் தொற்று எண்ணிக்கை அதிகம் தெரியும். இறப்பு விகிதம் குறைகிறதா என்பதை கவனிக்க வேண்டும். 60 வயதுக்கு மேல் இருப்பவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஊரடங்கு தளர்வை கொஞ்சம் இறுக்கப்படுத்தவேண்டும். சென்னையில் வார்டு வார்டாக நோய் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தி வருகிறோம். 253 நடமாடும் பரிசோதனை மையம் இயங்குகிறது. நோய் பற்றி பயம் இருப்பவர்கள் அதில் இருக்கும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம்.
முதல் சுற்று முடிந்தாலும், இரண்டாவது சுற்று வர வாய்ப்புள்ளது. நாமும் நம்மை சுற்றியிருப்பவரும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவேண்டும். அறிகுறி தோன்றினால் தனிமைப்படுத்தி விடுவார்களே என்று பயப்படவேண்டாம். எவ்வளவு சீக்கிரம் சிகிச்சைக்கு செல்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
ஊரடங்கு தளர்வை குறைத்து நோயை தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி கூறியுள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here